எம்மைப் பற்றி
சிவகங்கை மாவட்ட கால்நடை வளர்ப்பவர்களின் நலனுக்காக “கால்நடை வளர்ப்போர் நல நடுவம், தமிழ்நாடு” எனும் பெயரில் காளையார்கோயிலை மையமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. இவ்வமைப்பு 13/06/2022 அன்று பதிவு(எண் 34/2022) செய்யப்பட்டு கீழ்க்கண்ட செயல்பாடுகளை முன்னெடுத்து வருகிறது.
- சிவகங்கையில் மேய்ச்சலில் ஈடுபடும் கிடைக்காரர்களின் சமூக துயர் துடைக்கிறது.
- அவர்களுக்கான சட்ட உதவிகள் வழங்கி வருகிறது.
- மேய்ச்சல் தொழிலில் நவீனங்களை அறிமுகம் செய்திட விழைகிறது.
- அரசு நிறுவனங்களுடனான கொள்கை வகுப்பு உரையாடலில் பங்கேற்கிறது.
- கால்நடைகளுக்கான மரபு மருத்துவம்,நவீன மருத்துவம் ஆலோசனை வழங்கி வருகிறது.
- கிடைக்காரர்களுக்கு உரித்தான மேய்ச்சல் உரிமைகளை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது.
- தமிழ்நாடு முழுக்கவிருக்கும் மேய்ச்சல் நிலங்களை பற்றிய ஆவணங்களை தொகுத்து வருகிறது.
இதன் நீட்சியாக தமிழ்நாடு முழுக்க செயல்படும் மேய்ச்சல் செயற்பாட்டாளர்களுக்கான “தமிழ்நாடு மேய்ச்சல் சமூகக் கூட்டமைப்பு” என்ற கூட்டமைப்பில் இணைந்து தமிழ்நாடு மேய்ச்சல் நிலம் மற்றும் மேய்ச்சல் குமுகங்களுக்கான உரையாடலில் ஈடுபட்டு வருகிறது. தமிழ் அறிவு வெளியில் “கிடை” எனும் காலாண்டு இதழை வெளியீடுவதன் மூலம் மேய்ச்சல் குமுகத்தின் வாழ்வு,பண்பாடு,இன்னல்,இடையூறுகள் மற்றும் எதிர்பார்ப்புகள் ஆகியவற்றை பொது குமுகத்திற்கு எடுத்துச் செல்லும் பணியை மேற்கொள்கிறது.